செய்திகள்

சூப்பர்டா தம்பி: தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்த அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள்

18th Jun 2021 12:17 PM

ADVERTISEMENT

 

தமிழ்ப் படங்களைத் தாண்டி பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் அவ்வப்போது நடிக்க முயற்சி செய்யும் நடிகர் தனுஷ், அவெஞ்சர்ஸ் பட இயக்குநர்களின் அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ஆகிய படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குநர்களான ருஸோ பிரதர்ஸ் (அந்தோனி ருஸோ, ஜோசப் ருஸோ) அடுத்ததாக தி கிரே மேன் என்கிற ஆங்கிலப் படத்தை இயக்கி வருகிறார்கள். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. 

2022 தொடக்கத்தில் வெளியாகவுள்ள இப்படத்தில் ரையன் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் ஆகியோருடன் இணைந்து தனுஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புக்காக தற்போது அமெரிக்காவில் உள்ளார். அவெஞ்சர்ஸ் இயக்குநர்களின் அடுத்த படத்தில் தனுஷ் நடிப்பது அவருடைய திரை வாழ்க்கையில் ஒரு முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. 

ADVERTISEMENT

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படம் இன்று வெளியாவதையொட்டி அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள், ட்விட்டரில் தனுஷுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

சூப்பர்டா தம்பி. தனுஷுடன் இணைந்து பணியாற்றுவதில் உற்சாகமாக உள்ளோம். ஜகமே தந்திரம் படத்துக்கு வாழ்த்துகள் என்று ட்வீட் செய்து படத்தின் டிரெய்லரையும் பகிர்ந்துள்ளார்கள்.

Tags : Russo Brothers Jagame Thandhiram Dhanush
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT