செய்திகள்

மீண்டும் தொடங்கிய விஷால் 31 படப்பிடிப்பு: விடியோ வெளியிடு

15th Jun 2021 01:44 PM

ADVERTISEMENT

 

விஷால் 31 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது.

விஷால் நடிப்பில் கடைசியாக சக்ரா படம் வெளிவந்தது. துப்பறிவாளன், எனிமி, விஷால் 31 என மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

கரோனா ஊரடங்கு காரணமாகத் தமிழ்நாட்டில் திரையரங்குகள் இயங்கவும் திரைப்படப் படப்பிடிப்புகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளன. இதனால் விஷால் 31 படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. இதுபற்றி ட்விட்டரில் விஷால் கூறியதாவது:

ADVERTISEMENT

விஷால் 31 படப்பிடிப்பை ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளோம். நீண்ட நாள் படப்பிடிப்பு நடைபெறும். ஜூலை இறுதியில் முழு படப்பிடிப்பையும் முடித்துவிடுவோம். அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. மீண்டும் பணிக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி என்று கூறி விடியோவையும் வெளியிட்டுள்ளார். 

விஷால் 31 படத்தை து.ப. சரவணன் இயக்குகிறார். டிம்பிள் ஹயாத்தி கதாநாயகியாக நடிக்கிறார். இசை - யுவன் சங்கர் ராஜா. 

ADVERTISEMENT
ADVERTISEMENT