செய்திகள்

சிம்பு - ஹன்சிகா நடித்த மஹா படத்தை வெளியிடத் தடையில்லை: உயர் நீதிமன்றம்

DIN

சிம்பு - ஹன்சிகா நடித்த மஹா படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

ஹன்சிகாவின் 50-வது படம் மஹா. அறிமுக இயக்குநர் யு.ஆர். ஜமீல் இயக்கியுள்ளார். கருணாகரன், தம்பி ராமையா போன்றோரும் நடித்துள்ளார்கள். இசை - ஜிப்ரான்.

2015-ல் வெளியான வாலு படத்தில் சிம்புவும் ஹன்சிகாவும் இணைந்து நடித்தார்கள். இருவரும் காதலிப்பதாக அறிவித்தவர்கள் பிறகு கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்துபோனார்கள். மஹா படத்தின் மூலமாக இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ளார்கள்.

கடந்த அக்டோபர் மாதம் மஹா படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. எட்செட்ரா நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரித்துள்ளார். 

தனக்குத் தெரியாமல் படத்தை முடித்து, ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்சிப்பதாகக் கூறி, படத்தை வெளியிடத் தடை விதிக்க இயக்குநா் ஜமீல், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். மஹா படத்தின் கதைக்குத் தேவையான காட்சிகளை எடுக்காமல் என்னுடைய உதவி இயக்குநரை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. எனக்குத் தெரியாமல் படத்தை எடிட் செய்து, டப்பிங் பணிகளில் ஈடுபட்டு, படத்தை வெளியிட முயற்சி நடைபெற்று வருகிறது. படத்தை இயக்க எனக்கு ரூ. 24 லட்சம் ரூபாய் வழங்குவதாகக் கூறிவிட்டு தற்போது ரூ. 8.15 லட்சம் மட்டுமே தந்துள்ளார்கள். எனவே சம்பளத்தின் மீதித்தொகையை வழங்க உத்தரவிட வேண்டும். என்னுடைய கதைக்கருவை வேறு சிலரை வைத்து படமெடுத்து முடித்ததற்காக ரூ. 10 லட்சம் இழப்பீடு தரவேண்டும் என்று மனுவில் கூறினார்.  

சென்னை உயர நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர்கள் சங்கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இயக்குநருக்கு வழங்கவேண்டிய சம்பள பாக்கியில் ரூ. 5.50 லட்சத்தைத் தர தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டது. இதை இயக்குநர் ஏற்றுக்கொண்டதால் மீதிச் சம்பளம் அவருக்கு வழங்கப்பட்டு விட்டது.

பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதால் படத்தை ஓடிடியில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தங்களுடைய தரப்பை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய இரு தரப்பினருக்கும் உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை ஜூன் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

SCROLL FOR NEXT