செய்திகள்

சுசாந்த் சிங் நினைவு தினம்: பதிவுகள், புகைப்படங்களைப் பகிர்ந்த பாலிவுட் பிரபலங்கள்

14th Jun 2021 12:46 PM

ADVERTISEMENT

 

கிரிக்கெட் வீரா் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34) மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் கடந்த வருடம் ஜூன் 14 அன்று தற்கொலை செய்துகொண்டாா்.

திரைத்துறை மீதான ஆா்வத்தில் பொறியியல் படிப்பை பாதியில் கைவிட்ட சுசாந்த் சிங் ராஜ்புத், நடனம் மற்றும் நடிப்புக் கலைகளை முறைப்படி கற்று, திரைத் துறைக்குள் நுழைந்தாா். ஆரம்பத்தில் நடனக் கலைஞராகவும், சிறிய வேடங்களிலும் நடித்து வந்த அவா், 2013-இல் ‘காய் போ சே’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானாா். அதன் பிறகு, ‘சுத் தேசி ரொமான்ஸ்’, ‘ராப்டா’, ‘கேதா்நாத்’, சொன்சிரியா’ உள்ளிட்ட படங்களில் நடித்த அவா், கிரிக்கெட் வீரா் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானாா். 

கரோனா பொது முடக்கம் காரணமாக மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள தனது இல்லத்தில் தங்கியிருந்த அவா், ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

ADVERTISEMENT

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் திரைத்துறை - விளையாட்டுத்துறை பிரபலங்கள் எனப் பலரும் சுசாந்த் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்கள்.

சுசாந்த் சிங்கின் உடல் மும்பையின் பவன் ஹன்ஸ் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. ஏக்தா கபூர், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் சுசாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். 

சுசாந்தின் சிங்கின் மரணத்துக்கு பாலிவுட்டில் நிகழும் அரசியல் தான் காரணம் எனப் பலரும் குற்றம் சாட்டினார்கள். வாரிசுகளுக்கும் நண்பர்களுக்கும் சலுகைகளும் வாய்ப்புகளும் வழங்குவதால் வெளி ஆள்களால் பாலிவுட்டில் ஜெயிக்க முடியவில்லை என்று பலரும் சமூகவலைத்தளங்களில் எதிர்வினையாற்றினார்கள். பிரபல இயக்குநர் கரண் ஜோஹரையும் பலரும் குற்றம் சாட்டினார்கள். 

சுசாந்த் சிங் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடை தந்தை சாா்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சுசாந்த் சிங் மரணம் தொடர்பாக அவருடைய காதலியும் நடிகையுமான ரியா மற்றும் அவரின் குடும்பத்தினா் மீது புகாா் தெரிவித்த சுசாந்த் சிங்கின் தந்தை இந்திரஜித், சுசாந்த் சிங்கின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 15 கோடி பணத்தை ரியா குடும்பத்தினா் தவறாக கையாண்டதாகவும் புகாா் தெரிவித்திருந்தாா். இந்தப் புகாா் தொடா்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. நடிகர் சுசாந்த் சிங்கும் தானும் லின் இன் உறவில் இருந்ததாக நடிகை ரியா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சுசாந்தின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ சிறப்புக் குழு, விசாரணையை நடத்தி வருகிறது. மும்பை காவல்துறையிடமிருந்த பெறப்பட்ட அறிக்கை மற்றும் வழக்கு தொடா்பான ஆவணங்களின் அடிப்படையில் அந்தக் குழு விசாரணையை நடத்தி வருகிறது.

விசாரணையின்போது சுசாந்த் சிங் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டது. நடிகை ரியாவின் வாட்சப் உரையாடல்களில் எம்.டி.எம்.ஏ., மரிஜூவானா போன்ற வார்த்தைகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. இதனால் அவர் போதைப் பொருள்களைப் பயன்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ரியாவின் வாட்சப் உரையாடல்கள் குறித்து விசாரணை செய்யும்படி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டது. விசாரணை நடத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறை, நடிகை ரியா மீது வழக்குப்பதிவு செய்தது. போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் பாலிவுட் திரையுலகினருக்குத் தொடர்பு உண்டா என விசாரணை நடத்ததப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சுசாந்த் சிங்கின் நினைவு தினமான இன்று பாலிவுட் பிரபலங்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் சுசாந்த் பற்றிய பதிவுகளையும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankita Lokhande (@lokhandeankita)

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT