செய்திகள்

மத்திய அரசின் அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி

DIN

நடிகர் ரஜினிகாந்த், உடல் பரிசோதனைக்காக தனி விமானத்தில் அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சன் பிக்சா்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலா் நடிப்பில் உருவாகி வருகிறது. கரோனா பரவல், ரஜினியின் உடல்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது. ரஜினியின் உடல்நிலை சீரானவுடன் சென்னையிலும் பிறகு ஹைதராபாத்திலும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பை முடித்துக்கொண்டு மே 12 அன்று சென்னை திரும்பினார் ரஜினி. இதையடுத்து கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இனிமேல் தான் அண்ணாத்த பட டப்பிங் பணிகளில் ரஜினி ஈடுபடுவார். 

இந்நிலையில் தனது உடல் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு விரைவில் செல்லவுள்ளார் ரஜினி. 14 இருக்கைகள் கொண்ட தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்ல ரஜினி திட்டமிட்டுள்ளார். கரோனா சூழல் காரணமாக தனி விமானத்தில் அமெரிக்காவுக்குச் செல்ல மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளார் ரஜினி. இதற்கு மத்திய அரசு தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தனது குடும்ப உறுப்பினர்களுடன் அமெரிக்காவுக்கு விரைவில் செல்லவுள்ளார் ரஜினி.

சமீபத்தில் வெளியான அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ஆகிய படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குநர்களான ருஸோ பிரதர்ஸ் (அந்தோனி ருஸோ, ஜோசப் ருஸோ) அடுத்ததாக தி கிரே மேன் என்கிற ஆங்கிலப் படத்தை இயக்குகிறார்கள். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளிவரவுள்ளது. 2022 தொடக்கத்தில் வெளியாகவுள்ள இப்படத்தில் ரையன் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் ஆகியோருடன் இணைந்து தனுஷ் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்காவில் தற்போது உள்ளார் தனுஷ். ஐஸ்வர்யா தனுஷ், இரு மகன்கள் ஆகியோரும் தற்போது தனுஷுடன் அமெரிக்காவில் உள்ளார்கள். 

உடல் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு வரும் ரஜினியை ஐஸ்வர்யாவும் தனுஷும் கவனித்துக்கொள்வார்கள் என்று அறியப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT