செய்திகள்

சாலைகளில் பாதுகாப்புப் பணியில் பெண் காவலர்களுக்கு விலக்கு: நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ்

14th Jun 2021 11:42 AM

ADVERTISEMENT

 

சாலைகளில் பாதுகாப்புப் பணியில் பெண் காவலா்கள் ஈடுபட வேண்டாம் என்கிற தமிழக அரசின் உத்தரவுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார். 

முதல்வா், அமைச்சா்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் பாதுகாப்புப் பணிக்கு பெண் காவலா்கள் பயன்படுத்தப்படுகின்றனா். முக்கியமாக முதல்வா் பாதுகாப்புப் பணியின்போது சாலையின் இரு புறங்களிலும் பெண் காவலா்கள் மணிக்கணக்கில் நிறுத்தப்படுகின்றனா். இது எல்லா ஆட்சியிலும் நடைமுறையில் இருந்து வந்தது.

அதேபோல நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள், தங்கும் இடங்களிலும் பெண் காவலா்கள் நாள் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.இப் பணியால் பெண் காவலா்கள் உடல் ரீதியாக மிகுந்த சிரமப்படுகின்றனா். இந்நிலையில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், பெண் காவலா்கள் சிரமத்தை அறிந்தாா். உடனே, முதல்வா் ஸ்டாலின், தனது சுற்றுப்பயணத்தின்போது சாலை பாதுகாப்புப் பணிக்கு பெண் காவலா்களைப் பயன்படுத்த வேண்டாம் என தமிழக காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதியிடம் அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT

இந்த அறிவுறுத்தலை ஏற்ற திரிபாதி, முதல்வரின் சாலை பாதுகாப்புப் பணி உள்ளிட்ட முக்கிய பிரமுகா்களின் சாலை பாதுகாப்புப் பணிக்கு பெண் காவலா்களைப் பயன்படுத்த வேண்டாம் என அனைத்து மாநகர காவல் ஆணையா்கள், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள்,மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளதாவது:

சாலையில் பாதுகாப்புப் பணிகளில் இருந்து பெண் காவலருக்கு விலக்கு அளிக்கப்பட்ட செய்தியை அறிந்தேன் பலமுறை நான் என் தாயுடன் பயணம் செய்யும்போது இவ்வாறு பாதுகாப்புப் பணியில் இருக்கும் பெண்கள் இயற்கை உபாதைக்காக, அவசரத் தேவைகளுக்காகவும் என்ன செய்வார்கள் என்பது பற்றி என் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறார், நானும் வருந்தியிருக்கிறேன். அந்த வகையில் இந்த ஆணையைக் கண்டு மன நிம்மதி அடைகிறேன் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்

Tags : Raghava Lawrence ராகவா லாரன்ஸ்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT