செய்திகள்

சோனி லைவ் ஓடிடியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் பிரபல தயாரிப்பாளர்

12th Jun 2021 02:01 PM

ADVERTISEMENT

 

பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், சோனி லைவ் ஓடிடியின் தமிழ் பிரிவுக்குப் பொறுப்பேற்றுள்ளார்.

காற்றின் மொழி, மிஸ்டர் சந்திரமெளலி, கபடதாரி போன்ற படங்களைத் தயாரித்தவர் தனஞ்ஜெயன். சரிகமா - எச்.எம்.வி. - ஏர்டெல், வோடபோன், மோசர் பேர், டிஸ்னி - யுடிவி போன்ற நிறுவனங்களில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றியுள்ள தனஞ்ஜெயன், சொந்தமாகப் படத்தயாரிப்பு நிறுவனத்தையும் போஃப்டா என்கிற திரைப்படக் கல்வி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 

இந்நிலையில் தமிழில் ஆரம்பிக்கப்படும் சோனி லைவ் ஓடிடி பிரிவின் தமிழ் உள்ளடக்கப் பிரிவு, டிஜிடல் வியாபாரம் போன்றவற்றின் தலைமைப் பொறுப்புக்கு தனஞ்ஜெயன் தேர்வாகியுள்ளார். இதன்மூலம் சோனி லைவ் ஓடிடியிலும் புதிய தமிழ்ப் படங்கள், தமிழ் இணையத் தொடர்கள் அதிக எண்ணிக்கையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

ஜூன் 25 முதல் சோனி லைவ் ஓடிடியின் தமிழ்ப் பிரிவு இயங்கவுள்ளது. முதல் படமாக தேன் வெளியாகவுள்ளது. இதன்பிறகு நரகாசூரன், கடைசி விவசாயி போன்ற படங்கள் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Tamil Dhananjayan SonyLIV
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT