செய்திகள்

தமிழ் நடிகைக்கு இரட்டைக் குழந்தைகள்

12th Jun 2021 04:25 PM

ADVERTISEMENT

 

நடிகை சாஹித்யா ஜகன்நாதனுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.

2009-ல் மிஸ் சென்னை பட்டம் வென்றவர் சாஹித்யா. கெளதம் மேனன் இயக்கிய நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடிகையாக அறிமுகமானார். 2014-ல் பார்த்திபன் இயக்கிய கதை, திரைக்கதை, இயக்கம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். பிகில் படத்தில் வர்ணையாளராக நடித்தார். இதன்பிறகு தொலைக்காட்சியில் விளையாட்டுப் போட்டிகளின் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். 

கேரி எட்வர்ஸைத் திருமணம் செய்த சாஹித்யாவுக்கு ஜூன் 1 அன்று இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் நலமாக உள்ளன. அனைவருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி எனத் தனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தது பற்றி இன்ஸ்டகிராமில் சாஹித்யா தகவல் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

 

Tags : Sahithya Jagannathan twins
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT