செய்திகள்

லிங்குசாமி படத்தில் நடிக்கவில்லை: மாதவன்

12th Jun 2021 04:42 PM

ADVERTISEMENT

 

லிங்குசாமி இயக்கும் தெலுங்குப் படத்தில் நடிக்கவில்லை என நடிகர் மாதவன் கூறியுள்ளார்.

சண்டக்கோழி 2 படத்தை 2018-ல் இயக்கிய லிங்குசாமி அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார். தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை லிங்குசாமி அடுத்ததாக இயக்குகிறார். ஆனந்தம், ரன், ஜி, சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான், சண்டகோழி 2 ஆகிய படங்களை அவர் இயக்கியுள்ளார். 2006 முதல் தெலுங்குப் படங்களில் ராம் பொத்தினேனி நடித்து வருகிறார். 

ராம் பொத்தினேனி நடிப்பில் லிங்குசாமி இயக்கும் படத்துக்குத் தயாரிப்பு - ஸ்ரீனிவாசா சிட்டூரி. இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது. கீர்த்தி ஷெட்டி, நதியா நடிக்கிறார்கள். இசை - தேவி ஸ்ரீ பிரசாத். 

ADVERTISEMENT

இந்தப் படத்தில் மாதவன் வில்லனான நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. எனினும் மாதவன் இதை மறுத்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

லிங்குசாமியுடன் இணைந்து மீண்டும் பணிபுரிய ஆவலாக உள்ளேன். ஆனால் லிங்குசாமி இயக்கும் தெலுங்குப் படத்தில் நான் வில்லனாக நடிப்பதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை என்று கூறியுள்ளார். 

Tags : Madhavan Lingusamy Ram Pothineni
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT