செய்திகள்

ஓடிடியில் நேரடியாக வெளியாகிறதா நயன்தாரா படம்?

12th Jun 2021 12:20 PM

ADVERTISEMENT

 

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் - நெற்றிக்கண்.

மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு இசை - கிரிஷ் கோபாலகிருஷ்ணன். ஒளிப்பதிவு -  ஆர்டி ராஜசேகர். 

நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா, அஜ்மல், மணிகண்டன், சரண் போன்றோர் நடித்துள்ளார்கள்.

ADVERTISEMENT

இந்நிலையில் நெற்றிக்கண் படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கரோனா ஊரடங்கு காரணமாகத் திரையரங்குகளில் இயங்காத நிலையில் படத்தை ஓடிடியில் வெளியிட நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து இதுகுறித்த அதிகாபூர்வ விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : nayanthara Netrikann Hotstar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT