செய்திகள்

போலி ட்விட்டர் கணக்கு: நடிகர் சார்லி புகார்

11th Jun 2021 04:16 PM

ADVERTISEMENT

 

தன் பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு தொடங்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையரிடம் மூத்த நடிகர் சார்லி புகார் அளித்துள்ளார்.

கடந்த 35 வருடங்களுக்கும் மேலாகத் தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார் சார்லி. 2019-ல் தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை குறித்து ஆய்வு செய்ததற்காக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 

இந்நிலையில் நடிகர் சார்லி பெயரில் ட்விட்டர் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதை அதிகாரபூர்வமான கணக்கு என நம்பி ரசிகர்களும் பலரும் அந்தக் கணக்கைப் பின்தொடர ஆரம்பித்துள்ளார்கள். இதையடுத்து தன் பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு தொடங்கியவர்களைப் பற்றி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார் சார்லி. 

ADVERTISEMENT

எந்தச் சமூகவலைத்தளங்களிலும் எனக்குக் கணக்கு இல்லை. என் பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு தொடங்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சார்லி புகார் அளித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT