செய்திகள்

விஜய் 65 படத்தில் யோகி பாபு

8th Jun 2021 01:22 PM

ADVERTISEMENT

 

விஜய் 65 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார் நகைச்சுவை நடிகர் யோகி பாபு.

மாஸ்டர் படத்துக்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இது அவருடைய 65-வது படம். ஒளிப்பதிவு - மனோஜ் பரமஹம்சா. இசை - அனிருத். இப்படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே தேர்வாகியுள்ளார். பூஜா ஹெக்டே, 2012-ல் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பிறகு ஏராளமான தெலுங்குப் படங்களிலும் சில ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார். விஜய் 65 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது.

இந்நிலையில் விஜய் 65 படத்தில் நடிப்பதை நகைச்சுவை நடிகர் யோகி பாபு உறுதி செய்துள்ளார். சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடனான உரையாடலில் இதை அவர் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

மெர்சல், சர்கார், பிகில் படங்களுக்கு அடுத்ததாக விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார் யோகி பாபு. 
 

Tags : Yogi Babu Thalapathy 65 Vijay
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT