செய்திகள்

எடுத்தவரைக்கும் படம் நன்றாக வந்துள்ளது: சூர்யா 40 பற்றி இயக்குநர் பாண்டிராஜ்

8th Jun 2021 05:35 PM

ADVERTISEMENT

 

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதத்தில் வெளியானது. 

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், சூர்யாவின் நடிப்பில் வெளியாகவுள்ள 40-வது படம். பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு போன்றோர் நடிக்கிறார்கள். இசை - இமான். ஒளிப்பதிவு - ரத்னவேலு. 

இயக்குநர் பாண்டிராஜின் சமீபத்திய படங்கள் போல இதுவும் வலுவான குடும்பக் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் சூர்யா நடித்திருந்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. 

ADVERTISEMENT

இந்தப் படம் இயக்குநர் பாண்டிராஜ், ட்விட்டரில் தெரிவித்ததாவது:

35% படம் முடிந்துவிட்டது. எடுத்தவரைக்கும் நன்றாக வந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஊரடங்கு முடிந்ததும் ஆரம்பித்துவிட வேண்டியதுதான். எங்கள் படக்குழு தயாராக உள்ளது. படத்தலைப்பு, பட அறிவிப்புடன் வெளியிடப்படும். ஜூலை வரை காத்திருங்கள் என்றார். 

Tags : Pandiraj Suriya 40 announcement
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT