செய்திகள்

ஆண் குழந்தைக்குத் தந்தையானார் பிக் பாஸ் மஹத்

8th Jun 2021 11:07 AM

ADVERTISEMENT

 

அஜித் நடித்த மங்காத்தா படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமான மஹத், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதிகக் கவனம் பெற்றார்.

மிஸ் இந்தியா எர்த் 2002 பிரச்சி மிஸ்ராவைக் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார் மஹத்.

பிப்ரவரி 1, 2020 அன்று பிரச்சி மிஸ்ராவைத் திருமணம் செய்துகொண்டார். மஹத் - பிரச்சி திருமண நிகழ்வில் மு.க. அழகிரி, சிம்பு, அனிருத் போன்ற பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். 

ADVERTISEMENT

இந்நிலையில் பிரச்சி மிஸ்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இத்தகவலை ட்விட்டரில் தெரிவித்த மஹத், குழந்தையின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

Tags : Mahat Prachi baby boy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT