செய்திகள்

கவிஞர் சினேகன் - கன்னிகா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலங்கள்

30th Jul 2021 01:15 PM

ADVERTISEMENT

பாடலாசிரியர் சினேகனுக்கும், நடிகை கன்னிகா ரவிக்கும் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலங்கள் கலந்துகொண்டனர். 

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரான சினேகன், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். பின்னர் கமல்ஹாசன் துவங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். 

இதையும் படிக்க| இது என்ன பரம்பரையா இருக்கும் ? : விடியோ பகிர்ந்த பிரபல நடிகை 

ADVERTISEMENT

இந்த நிலையில் அவருக்கும் நடிகை கன்னிகா ரவிக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் நடிகர் கமல்ஹாசன் தாலி எடுத்துக்கொடுக்க வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் போன்றவர்கள் கலந்துகொண்டனர். 

இந்த நிலையில் இருவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்வில் அவருடன் கலந்துகொண்ட சுஜா வருணி தனது கணவர் சிவகுமாருடன் கலந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிக்க | வதந்திக்கு விடியோ மூலம் முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஷகீலா

மேலும், கணேஷ் வெங்கட்ராம், சக்தி, இசையமைப்பாளர் இமான், இயக்குநர்கள் பாக்யராஜ், சுசீந்திரன், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர். 

Tags : Bigg Boss K Bhagyaraj Suja Varunee Suseenthiran Snehan Kannika Aarav
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT