செய்திகள்

சிறப்பு தினத்தில் வெளியாகும் நடிகர் பிரபாஸின் ராதே ஷ்யாம் - வெளியான போஸ்டர்

30th Jul 2021 11:08 AM

ADVERTISEMENT

பிரபாஸ் நடித்துள்ள 'ராதே ஷ்யாம்' படம் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. 

'பாகுபலி'க்கு பிறகு நடிகர் பிரபாஸ் இந்திய அளவில் பிரபலமான நடிகராகிவிட்டார். அவரது படங்கள் இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வருகின்றன. 

இதையும் படிக்க| சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த்தின் தற்போதைய நிலை என்ன ? - பிரபல நடிகர் உருக்கம் 

கடைசியாக அவர் நடிப்பில் வெளியான 'சாஹோ' திரைப்படம் வெற்றிபெறவில்லை என்றாலும், அவர் படங்களுக்கு இன்னும் எதிர்பார்ப்பு குறையவில்லை. அவரது அடுத்த படம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. 

ADVERTISEMENT

இந்த நிலையில் அவர் நடித்துள்ள 'ராதே ஷ்யாம்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராதே ஷ்யாம் திரைப்படம் வருகிற 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி இந்தியாவில் வெளியாவகவுள்ளது.

இதற்கான போஸ்டர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. தென்னிந்திய மொழிகளில் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிராபகரனும், ஹிந்தியில் மிதுன்-மனன் பரத்வாஜூம் இசையமைக்கின்றனர். தற்போது நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் மனோஜ் பரமஹம்சா, இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.  

இதையும் படிக்க | ரசிகர்களை ஏமாற்றிய கேஜிஎஃப் 2 புது போஸ்டர் 

இதனையடுத்து கேஜிஎஃப் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சலார், ராமாயணத்தை அடிப்பைடையாகக் கொண்டு உருவாகும் ஆதிபுருஷ், அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோனுடன் இணைந்து நடிக்கும் ஒரு படம் என அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. இதில் மகாநடி இயக்குநர் நாக் அஸ்வினுடன் அவர் இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது குறிப்பிடத்தக்கது. 

Tags : Radhe Shyam Prabhas Pooja Hegde Justin Prabhakaran
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT