செய்திகள்

பா.ரஞ்சித்தின் 'சார்பட்டா பரம்பரை' - என்ன சொல்கிறார்கள் சூர்யாவும் சிவகார்த்திகேயனும் ?

29th Jul 2021 04:16 PM

ADVERTISEMENT

பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை படம் குறித்து சூர்யாவும் சிவகார்த்திகேயனும் தங்களது சுட்டுரைப் பக்கங்கள் வாயிலாக கருத்து தெரிவித்துள்ளனர்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா தனது சுட்டுரைப் பக்கத்தில், ''சார்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்திகிறது. வட சென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குநரும், நடிகர்களும், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்படவைக்கிறது. வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க| - கோமா நிலைக்கு சென்ற சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த்

ADVERTISEMENT

இதனையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன், ''சார்பட்டா பரம்பரை படத்துக்காக உழைத்த அனைவரும் பெருமைப்பட வேண்டிய படைப்பு. இந்தப் படத்தின் தயாரிப்பில் பங்குகொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள். சிறப்பான படம். தவறவிடாதீர்கள்'' என ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படிக்க| ஹிந்திக்கு செல்லும் நடிகர் அருண் விஜய்யின் படம் 

சார்பட்டா பரம்பரையில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்க, பசுபதி, ஜான் விஜய், கலையரசன், ஜான் கொக்கேன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT