செய்திகள்

ரசிகர்களை ஏமாற்றிய கேஜிஎஃப் 2 புது போஸ்டர் - என்ன ஆனது?

29th Jul 2021 03:02 PM

ADVERTISEMENT

கேஜிஎஃப் திரைப்படத்தின் புதிய போஸ்டரில் வெளியீட்டுத் தேதி இடம் பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

யஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கன்னடப் படம் 'கேஜிஎஃப்'. முதல் பாகம் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியானாலும் இந்திய அளவில் பெரிய வெற்றிப் படமா அமைந்தது. 

சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் இந்தப் படத்தின் வசனங்கள் தான் அதிகம் காணப்பட்டன. அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து இந்தப் படத்தின் 

இரண்டாம் பாகத்தில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் வில்லனா நடிக்கவிருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரண்டு மடங்கானது. 

ADVERTISEMENT

தற்போது இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில இந்தப் படத்தின் ரீலிஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகும் என அறிவிக்கப்பட, போஸ்டரில் படத்தின் வெளியீட்டுத் தேதி இடம் பெற்றிருக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

கேஜிஎஃப் படம் மிகப் பெரிய பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் காரணத்தால், படத்தை திரையரங்குகளில் வெளியிட்டால் தான் சரியாக இருக்கும் என்று படக்குழு கருதுகிறார்கள். இந்தியா முழுவதும் வெளியாவதால், அனைத்து மாநிலங்களிலும் கரோனா பரவல் கட்டுக்குள்ள வந்து, திரையரங்குகள் திறக்கப்பட்டால் தான் இது சாத்தியம். இதனால் இந்தப் படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்று வெளியான போஸ்டரில் வெளியீட்டுத் தேதி இடம்பெறாதது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இதனை அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிடும் பதிவை வைத்தே தெரிந்து கொள்ளலாம். 

Tags : KGF Chapter 2 yash Sanjay Dutt KGF Shrinidhi Shetty
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT