செய்திகள்

பிசாசு - 2: முதல்பார்வை வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

29th Jul 2021 09:31 PM

ADVERTISEMENT

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு 2 திரைப்படத்தின் முதல்பார்வை ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சைக்கோ படத்துக்கு அடுத்ததாக விஷால் நடிப்பில் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்த மிஷ்கின், விஷாலுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக அப்படத்திலிருந்து விலகினார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு தனது பிறந்த நாளன்று பிசாசு 2 படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட மிஷ்கின் 2020 டிசம்பரில் படப்பிடிப்பைத் தொடங்கினார்.

நடிகை ஆண்ட்ரியா நடிக்கும் இந்தத் திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். இந்தத் திரைப்படத்தின் முதல் பார்வை ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகும் என வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

பிசாசு முதல் பாகம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற நிலையில் பிசாசு 2 திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT