செய்திகள்

நடிகை சரிதாவுக்குப் பிறகு 2வது மனைவியையும் பிரிந்த நடிகர் முகேஷ் - காரணம் என்ன ?

28th Jul 2021 05:03 PM

ADVERTISEMENT

ஏற்கனவே நடிகை சரிதாவுடன் விவாகரத்து பெற்ற நிலையில் நடிகர் முகேஷி்ன் இரண்டாவது திருமணமும் முடிவுக்கு வந்துள்ளது. 

மலையாள நடிகரும் கேரள சட்டமன்ற உறுப்பினருமான  முகேஷ் நடிகை சரிதாவை கடந்த 1998 ஆம் திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 

முகேஷ் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர் குடிகாரர் எனவும் அப்போது நடிகை சரிதா குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து நடிகர் முகேஷ் பரத நாட்டியக் கலைஞர் தேவிகா என்பவரை திருமணம் செய்தார். தற்போது இந்தத் திருமணமும் முடிவுக்கு வந்துள்ளது. 

இருவரும் விவாகரத்துப் பெற குடும்ப நல நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திருமண முறிவு குறித்து பேசிய தேவிகா, இது எங்களது தனிப்பட்ட முடிவு. இதனைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை. முகேஷ் நல்ல கணவர் இல்லை. அவருடன் இனி சேர்ந்து வாழ்வதற்கான நம்பிக்கையை இழந்துவிட்டேன். தேர்தல் முடியும் வரை காத்திருந்தேன். எனது விவகாரத்து முடிவு அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தப்படக் கூடாது என்பதற்காக தான் காத்திருந்தேன். முகேஷை பிரிவது என நான் எடுத்த முடிவு மிகவும் வலிமிக்கது என்றார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க:

பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராயின் வேடம் இதுவா?

ஓடிடியில் படங்கள் வெளியாவதை நடிகர்கள் விரும்பாதது ஏன்?

தனுஷ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா மாறன்?

நடிகர் விஜய்யி்ன் அடுத்தப் பட இயக்குநர் இவரா?

 

Tags : Saritha Mukesh Devika
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT