செய்திகள்

இசை குறித்த இளையராஜாவின் கருத்தை பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்: தனுஷ் என்ன சொல்கிறார்?

24th Jul 2021 12:49 PM

ADVERTISEMENT

இசை குறித்த இளையராஜாவின் கருத்தை பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மானின் செயலை தனுஷ் வரவேற்று தனது சுட்டுரைப் பக்கத்தில் கருத்து தெரிவத்துள்ளார். 

இசைஞானி இளையாராஜா இசையமைத்து பாரதிராஜா இயக்கிய '16 வயதினிலே' திரைப்படம் வெளியாகி 40 வருடங்களுக்கு மேலாகிறது. இதுகுறித்து இளையாராஜா கூறியிருப்பதாவது, '16 வயதினிலே' படம் வெளியாகி 40 வருடமாகிறது. 20 வருடத்துக்கு முன்பு போட்ட பாடல்களை இன்னும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். 

பாடல்களை எப்போது கேட்டாலும் புதிதாக இருக்க வேண்டும். இப்போது தான் போட்ட மாதிரி இருக்கிறதே என ரசிகர்கள் சொல்ல வேண்டும். பழைய பாடல்களை நாம் மீண்டும் கேட்க காரணம், அது புதிதாக இருப்பதால் தான் என தெரிவித்திருந்தார். 

இந்த செய்தியை ஏ.ஆர்.ரஹ்மான் தனது சுட்டுரையில் பகிர்ந்துள்ளார். இந்த செயல், இசை குறித்த இளையராஜாவின் கருத்தை ஏ.ஆர்.ரஹ்மான் ஆமோதிப்பது போல் உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் சுட்டுரையை தனது பக்கத்தில் பகிர்ந்த நடிகர் தனுஷ், 'இதுதான் எனது பதிவு, இது மட்டும் தான்' என இருவரது கருத்தையும் வரவேற்றுள்ளார். இது இசை ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. 

ADVERTISEMENT

 

Tags : AR rahman Ilaiyaraaja dhanush music 16 Vayathinile
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT