செய்திகள்

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்', சிவகுமார் படத் தலைப்பா ? - ரசிகர்கள் பகிரும் பழைய போஸ்டர்

23rd Jul 2021 02:00 PM

ADVERTISEMENT

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' தலைப்பில், சிவகுமார் நடித்து 40 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு படம் வெளியாகியிருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் 'எதற்கும் துணிந்தவன்' படத் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டது. மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) நடிகர் சூர்யாவின் பிறந்த நாள் என்பதால் நள்ளிரவு 12 மணிக்கு வெளியான இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. 

இந்த நிலையில் 'எதற்கும் துணிந்தவன்' தலைப்பு சூர்யாவின் அப்பாவான சிவகுமார் நடித்து 40 ஆண்டுகளுக்கு முன் வெளியான படத்தின் தலைப்பாகும்.
இதனையடுத்து சூர்யா பட போஸ்டரையும், சிவகுமார் நடித்துள்ள பட போஸ்டரையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அப்பா சிவகுமாரின் தலைப்பில் அவரது மகன் சூர்யா நடிப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ADVERTISEMENT

சன் பிக்சர்ஸ் சார்பாக கலாநிதி மாறன் தயாரித்து வரும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, 'வாரணம் ஆயிரம்' படத்துக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் ரத்னவேலு இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்துள்ளார். நடிகர் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 


 

Tags : Etharkum Thunindhavan Suriya Sivakumar Sun Pictures D Imman
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT