செய்திகள்

'சார்பட்டா பரம்பரை'யில் ஆர்யாவுக்கு பதில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகரா ?

23rd Jul 2021 11:23 AM

ADVERTISEMENT

'மெட்ராஸ்' பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் நடிக்கவிருந்த தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். 

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்து, அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. இந்த படத்துக்கு விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இயக்குநர்கள் சமுத்திரக்கனி, செல்வராகவன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தைப் பாராட்டி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் என்பது குறித்து சுவாரசியத் தகவல் கிடைத்துள்ளது. 'மெட்ராஸ்' பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய கார்த்தி, மெட்ராஸ் படத்துக்கு முன்பே 'சார்பட்டா' படத்தில் நானும் ரஞ்சித்தும் இணையவிருந்தோம். சில காரணங்களால் அந்தப் படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. ரஞ்சித்துடன் பணியாற்றும் விருப்பம் எனக்கு  எப்பொழுதுமே இருந்தது. அதன் காரணமாகவே மெட்ராஸ் படத்தில் இணைந்தோம்.

ADVERTISEMENT

 வட சென்னை இளைஞன் கதாப்பாத்திரத்தில் நான் பொருந்துவேனா? என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால் ரஞ்சித் எனக்கு அளித்த ஊக்கத்தின் காரணமாகவே என்னால் இந்தப் படத்தில் நடிக்க முடிந்தது. 

இந்த படத்தில் கதாநாயகன் பாத்திரத்தை என் வயதுக்கு ஏற்றபடி வடிவமைக்கக் கேட்டுக்கொண்டேன். அதற்கு ரஞ்சித் மறுப்பேதும் சொல்லாமல் சம்மதித்தார்'' என்று கூறியுள்ளார். நடிகர் கார்த்தி சொன்னதுபோல் நடந்திருந்தால், 6 வருடங்களுக்கு முன்பே சார்பட்டா படத்தை நாம் திரையரங்குகளில் பார்த்திருக்க முடியும்.  ஆர்யாவுக்கு பதில் கார்த்தி இந்தப் படத்தில் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். 

Tags : Sarpatta Parambarai Pa Ranjith Arya Karthi Santhosh Narayanan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT