செய்திகள்

அடுத்த அதிரடி: சூர்யாவின் 39வது பட முதல் பார்வை போஸ்டர் இதோ

23rd Jul 2021 05:11 PM

ADVERTISEMENT

சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு 'எதற்கும் துணிந்தவன்' பட தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.  'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை' படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் படம் என்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைக்க, ரத்னவேலு  ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

இந்தப் படத்துக்கு முன்னதாக சூர்யா தனது 2 டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக தயாரித்து, சிறப்பு வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 'கூட்டத்தில் ஒருவன்' படத்தை இயக்கிய ஞானவேல் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

சூர்யாவின் 39வது படமான இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். எஸ்.ஆர்.கதிர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். 'கர்ணன்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ரஜிஷா விஜயன், நடிகர் பிரகாஷ் ராஜ், மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

ADVERTISEMENT

மேலும் நடிகர் அருண் விஜய்யின் மகன் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிலோமின் ராஜ் இந்தப் படத்தின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 

ஜெய் பீம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின், முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் சூர்யா வழக்கறிஞர் தோற்றத்தில் இருக்கிறார். இதனால் இந்தப் படத்தில் வழக்கறிஞராக நடிக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

Tags : prakash raj Suriya 2D Entertainment Sean Rolden Rajisha VIjayan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT