செய்திகள்

ஷங்கர் படத்துக்கு இசையமைக்கும் தமன்: அதிகாரபூர்வ அறிவிப்பு

19th Jul 2021 12:43 PM

ADVERTISEMENT

 

ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு தமன் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு நடிகர் ராம் சரண் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோருடன் இணைந்து இரு படங்களை ஷங்கர் இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகின. அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார்.

ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கும் படம் பற்றிய அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ராம் சரணின் 15-வது படம் இது. 

ADVERTISEMENT

எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து வரும் ராம் சரண், அடுத்ததாக பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் நடிப்பது திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷங்கர் - ராம் சரண் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் எனத் தெரிகிறது. 

இந்தியன் 2 வழக்கு தொடர்பான சிக்கலில் இருந்து விடுபட்டுள்ள ஷங்கரை நடிகர் ராம் சரண், தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் சென்னையில் இரு வாரங்களுக்கு முன்பு சந்தித்து பட விவாதத்தில் ஈடுபட்டார்கள். 

இந்நிலையில் ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு தமன் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நடித்த தமன், தற்போது ஷங்கர் இயக்கும் படத்துக்கு இசையமைக்கிறார். ஷங்கர் படத்தில் பணியாற்றுவது குறித்த தன்னுடைய மகிழ்ச்சியை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார் தமன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT