பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதத்தில் வெளியானது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், சூர்யாவின் நடிப்பில் வெளியாகவுள்ள 40-வது படம். பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு போன்றோர் நடிக்கிறார்கள். இசை - இமான். ஒளிப்பதிவு - ரத்னவேலு.
பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் சூர்யா நடித்திருந்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது.
ADVERTISEMENT
இந்நிலையில் ஜூலை 23 அன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் சூர்யா. அதற்கு முந்தைய நாளன்று சூர்யா 40 படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகவுள்ளது.