செய்திகள்

காஜல் அகர்வால் நடிக்கும் கருங்காப்பியம்

19th Jul 2021 02:31 PM

ADVERTISEMENT

 

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபல நடிகையாக உள்ளார் காஜல் அகர்வால். தமிழில் கடைசியாக, இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார். தொழிலதிபர் கெளதம் கிச்லுவை சமீபத்தில் திருமணம் செய்தார்.  

காஜல் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மற்றொரு தமிழ்ப் படம், பாரிஸ் பாரிஸ். கங்கனாவிற்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்த குயின் படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 

யாமிருக்க பயமே, கவலை வேண்டாம், காட்டேரி ஆகிய படங்களை இயக்கியவர் டீகே. அவருடைய இயக்கத்தில் திகில் படமொன்றில் நடித்துள்ளார் காஜல் அகர்வால். 

ADVERTISEMENT

டீகே இயக்கத்தில் காஜல் அகர்வால், ரெஜினா, ஜனனி, ரைசா, இரானைச் சேர்ந்த நொய்ரிகா என ஐந்து கதாநாயகிகள் நடிப்பில் கருங்காப்பியம் என்றொரு படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக இயக்குநர் டீகே தெரிவித்துள்ளார்.

கருங்காப்பியம் படத்தில் கலையரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான் விஜய் போன்றோரும் நடித்துள்ளார்கள்.  

Tags : Karungaapiyam
ADVERTISEMENT
ADVERTISEMENT