செய்திகள்

20 கோடி பார்வைகளைக் கடந்து கேஜிஎஃப் 2 திரைப்பட டீசர் சாதனை

17th Jul 2021 04:16 PM

ADVERTISEMENT

நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேஜிஎஃப் 2 திரைப்படத்தின் டீசர் யூடியூப் தளத்தில் 20 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் 2018-ல் கன்னடத்தில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றதையடுத்து தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியானது.  

இந்நிலையில் கேஜிஎஃப் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகியுள்ள கேஜிஎஃப் 2-ம் பாகத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்துள்ளனர். 

கேஜிஎஃப் 2 படம் கன்னடம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் ஜூலை 16 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. 

ADVERTISEMENT

இந்நிலையில் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டீசர் 20 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த டீசருக்கு இதுவரை 80 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்தும், 20 லட்சம் பேர் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ரசிகர்களின் வரவேற்பால் கேஜிஎஃப் 2 திரைப்படக் குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

Tags : KGF KGF 2 Teaser
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT