செய்திகள்

சென்னை திரும்புகிறார் ரஜினி

7th Jul 2021 01:06 PM

ADVERTISEMENT

 

மருத்துவப் பரிசோதனை முடிந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு நாளை திரும்புகிறார் ரஜினி.

சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகா் ரஜினிகாந்த், கரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டார். இதற்காக மத்திய அரசிடம் சிறப்பு அனுமதியையும் அவா் கோரி இருந்தாா். ரஜினிகாந்த், தனி விமானத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து மத்திய அரசு உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட தனி விமானத்தில் சென்னையிலிருந்து அமெரிக்காவுக்குச் சில வாரங்களுக்கு முன்பு சென்றார் ரஜினி. அவருடன் குடும்பத்தினரும் சென்றார்கள்.

அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற மயோ மருத்துவமனையில் ரஜினிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. மருத்துவமனையின் வெளியே மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் ரஜினி சாலையைக் கடக்கும்போது எடுத்த புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் சமீபத்தில் வெளியானது. பிறகு, அமெரிக்காவில் ரஜினியுடன் அவருடைய ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வெளியாகின. 

ADVERTISEMENT

மருத்துவப் பரிசோதனை முடிந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு நாளை திரும்புகிறார் ரஜினி. இதையடுத்து அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளில் அவர் விரைவில் ஈடுபடவுள்ளார். அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாவதைச் சமீபத்தில் சன் பிக்சர்ஸ் உறுதி செய்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT