செய்திகள்

ரஜினியின் ‘அண்ணாத்த’ தீபாவளி வெளியீடு: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

1st Jul 2021 06:33 PM

ADVERTISEMENT

 

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளிவருவதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. தற்போது ரஜினி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். 

அண்ணாத்த படத்தில் நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலா் ரஜினியுடன் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு - வெற்றி, இசை - இமான்.

ADVERTISEMENT

கடந்த வருட இறுதியில் ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு நடத்தப்பட்டது. எனினும் அண்ணாத்த படப்பிடிப்புத் தளத்தில் நான்கு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இதையடுத்து ஹைதராபாத்தில் ராமோஜி திரைப்பட நகரில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லையென்றாலும் ரஜினிக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி, அண்ணாத்த படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது. 

பிறகு அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொண்டார். அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதற்காக தனி விமானத்தில் சென்னையிலிருந்து ஹைதரபாத்துக்குச் சென்றார் ரஜினி. தற்போது, அண்ணாத்த படப்பிடிப்பில் தன்னுடைய காட்சிகள் அனைத்தையும் நடித்துக் கொடுத்துவிட்டார்.

இந்நிலையில் அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. நவம்பர் 4 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT