செய்திகள்

பாலிவுட்டில் 21 வருடங்களை நிறைவு செய்த நடிகை கரீனா கபூர்

1st Jul 2021 04:54 PM

ADVERTISEMENT

 

இந்தியாவின் பிரபல நடிகைகளில் ஒருவர், கரீனா கபூர். 20 வருடங்களுக்கு முன்பு வெளியான ரெப்யூஜி படத்தில் அபிஷேக் பச்சனும் கரீனா கபூரும் அறிமுகமானார்கள்.

2012-ல் நடிகை கரீனா கபூரும் நடிகர் சயிப் அலி கானும் திருமணம் செய்துகொண்டார்கள். 2016-ல் மகன் பிறந்தான். தைமூர் அலி கான் எனப் பெயர் சூட்டினார்கள். கடந்த பிப்ரவரி மாதம் கரீனா கபூருக்கு மற்றொரு ஆண் குழந்தை பிறந்தது.

நடிகர் ஆமிர் கானின் அடுத்த படமான லால் சிங் சத்தா-வில் கதாநாயகியாக நடித்து வருகிறார் கரீனா கபூர். 

ADVERTISEMENT

இந்நிலையில் திரையுலகில் 21-வது வருடத்தை கரீனா கபூர் பூர்த்தி செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

21 வருடங்கள் ஆகிவிட்டன. மகிழ்ச்சியாகவும் ஆசிர்வதிக்கப்பட்டவராகவும் மேலும் ஆர்வம் உள்ளவராகவும் இருக்கிறேன். இன்னும் 21 வருடங்கள் நடிப்பேன். அதற்குத் தயாராக உள்ளேன். அனைவருடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்று கூறியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT