செய்திகள்

நடிகை ஷ்ருதி ஹாசனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ஓவியர்!

30th Jan 2021 03:17 PM

ADVERTISEMENT

 

நடிகை ஷ்ருதி ஹாசன் தனது 35-வது பிறந்த நாளைச் சமீபத்தில் கொண்டாடினார்.

கேஜிஎஃப் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் ஷ்ருதி ஹாசன் கதாநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் அறிவிப்பு அவருடைய பிறந்த நாளன்று வெளியானது.

இந்நிலையில் ஓவியர் சாந்தனு ஹஸாரிகா மற்றும் நண்பர்களுடன் இணைந்து மும்பையில் தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார் ஷ்ருதி ஹாசன். ஷ்ருதியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் சாந்தனு. அஸ்ஸாமைச் சேர்ந்த சாந்தனு தற்போது மும்பையில் வசித்து வருகிறார். 

ADVERTISEMENT

சமீபகாலமாக ஷ்ருதியும் சாந்தனு ஹஸாரிகாவும் மும்பையில் ஒன்றாக வெளியே சுற்றும் விடியோக்களும் புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இதனால் ஷ்ருதி - சாந்தனு ஆகிய இருவரையும் இணைத்து செய்திகள் வெளிவருகின்றன. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT