செய்திகள்

கேஜிஎஃப் 2: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

30th Jan 2021 12:33 PM

ADVERTISEMENT

 

யாஷ் நடிப்பில் 2018-ல் வெளியான கேஜிஎஃப் என்கிற கன்னடப் படம் இந்திய அளவில் கவனம் பெற்றது. மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். 

கேஜிஎஃப் படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்துள்ளார்கள். கரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் மாத இறுதியிலிருந்து கேஜிஎஃப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. 

இந்நிலையில் கேஜிஎஃப் 2 படம் திரையரங்குகளில் ஜூலை 16 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னடம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT