செய்திகள்

கூகுள் குட்டப்பனாக மாறியுள்ள ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்!

DIN

தெனாலி படத்துக்குப் பிறகு ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் என்கிற மலையாளப் படத்தை ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளார் பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமார். 

2019-ல் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படமான ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் வெர்ஷன் 5.25. ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. சுராஜ், செளபின் போன்றோர் நடித்திருந்தார்கள். 

இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் பெற்றுள்ளார். ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் படம் தமிழில் கூகுள் குட்டப்பன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. முதியவர் வேடத்தில் கே.எஸ். ரவிகுமார் நடிக்கிறார். தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு போன்றோரும் நடிக்கிறார்கள். கே.எஸ். ரவிகுமாரின் உதவி இயக்குநர்களான சபரி மற்றும் சரவணன் கூகுள் குட்டப்பனை இயக்குகிறார்கள். 

இயக்குநர்கள் சபரியும் சரவணனும் ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் படத்தை ரீமேக் செய்ய முதலில் விருப்பப்பட்டு முதியவர் வேடத்தில் நடிக்க கே.எஸ். ரவிகுமாரை அணுகியுள்ளார்கள். தயாரிப்பாளர் தரப்பில் சில சிக்கல்கள் இருந்ததால் பிறகு கே.எஸ். ரவிகுமாரே ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் ரீமேக் உரிமையை வாங்கி தயாரிக்க முடிவெடுத்துள்ளார். இதனால் கமல் நடித்த தெனாலி படத்துக்குப் பிறகு 21 வருடங்கள் கழித்து அடுத்த படத்தை அவர் தயாரிக்கிறார். 

கூகுள் குட்டப்பன் படத்துக்கு இசை - ஜிப்ரான். இன்று முதல் பாடல் ஒலிப்பதிவு நடைபெறுகிறது. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் பிப்ரவரி 15 முதல் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT