செய்திகள்

லைகா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான்

27th Jan 2021 11:29 AM

ADVERTISEMENT

 

சிவகார்த்திகேயனின் புதிய படம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ஹீரோ படம் வெளியானது. தற்போது - டாக்டர், அயலான் என இரு படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இரு படங்களின் படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளது. கோடை விடுமுறையின்போது டாக்டர் படம் வெளியாகிறது. இதன்பிறகு டிசம்பரில் அயலான் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் அடுத்ததாக புதிய இயக்குநரின் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் டான் என்கிற படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

டான் படத்தை அறிமுக இயக்குநர் சிபி சிக்ரவர்த்தி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT