செய்திகள்

தமிழக முதல்வரைச் சந்தித்தது ஏன்: நடிகர் விவேக் விளக்கம்

DIN

தமிழக முதல்வர் பழனிசாமியைச் சந்தித்ததற்கான காரணத்தை நடிகர் விவேக், ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.

பிரபல நடிகர் விவேக், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை நேற்று சந்தித்தார். இதுபற்றி முதல்வர் ட்விட்டர் கணக்கில் கூறப்பட்டதாவது: இன்று (26.1.2021) முகாம் அலுவலகத்தில் திரைப்பட நடிகர் திரு. விவேக்  அவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார் என்றார்.

இந்நிலையில் தமிழக முதல்வரைச் சந்தித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார் விவேக். ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது:

அரசியலுக்கோ/என் சொந்த காரணமாகவோ முதல்வர் அவர்களைப் பார்க்கவில்லை. தமிழ்த் துறவி அருட்பா தந்த வள்ளலார் (1823 - 1874) தன் வாழ்வில் 33 ஆண்டுகள் நடந்து வடிவுடையம்மனை வணங்கிய திருவொற்றியூர் பாதையை வள்ளலார் நெடுஞ்சாலை என்று பெயர் சூட்ட மனு அளித்தேன். இன்முகத்துடன் ஏற்றார். நற்செய்தி வரலாம் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

திமுக தொண்டா் மீது தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல்

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT