செய்திகள்

ஆஸ்கர் போட்டிப் பிரிவுக்கு சூரரைப் போற்று தேர்வு

26th Jan 2021 06:54 PM

ADVERTISEMENT


ஆஸ்கர் விருது போட்டிப் பிரிவுக்கான திரையிடலுக்கு சூர்யாவின் சூரரைப் போற்று படம் தேர்வாகியுள்ளது.

நடிகர் சூர்யா நடித்து சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. கரோனா பொது முடக்கம் காரணமாக நீண்ட தாமதத்துக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக சூர்யாவின் நடிப்பு, ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை பெருமளவில் பாராட்டுகளைப் பெற்றது.  

இந்த நிலையில் ஆஸ்கர் போட்டிப் பிரிவுக்கான திரையிடலுக்கு இந்தப் படம் தேர்வாகியுள்ளது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசை மற்றும் இதர பிரிவுகளில் தேர்வாகியுள்ளது.

இந்த செய்தியைத் தொடர்ந்து, சூரரைப் போற்று ஹேஷ்டேக் சுட்டுரையில் டிரெண்டாகி வருகிறது.

ADVERTISEMENT

Tags : soorarai potru
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT