செய்திகள்

விஷாலின் ‘சக்ரா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

24th Jan 2021 05:08 PM

ADVERTISEMENT

 

சென்னை: நடிகர் விஷாலின் ‘சக்ரா’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ். ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள படம் - சக்ரா. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மே 1-ம் தேதி படம் வெளிவருவதாக இருந்த நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக வெளியீடு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.  பின்னர் ஓடிடி தளத்தில் வெளியிடும் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் ‘சக்ரா’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு வெளியான 'மாஸ்டர்' படத்துக்கு திரையரங்குகளில்  கிடைத்துள்ள பிரம்மாண்ட வரவேற்பை முன்வைத்து திரையரங்கிலேயே 'சக்ரா' படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

அதன்படி பிப்ரவரி 12-ம் தேதி 'சக்ரா' வெளியாகும் எனப் படக்குழு அறிவித்து, அதற்கான பணியில் படக்குழு இறங்கியுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT