செய்திகள்

சூர்யாவுடன் முதன்முறையாக கரம் கோர்க்கும் இசையமைப்பாளர்

24th Jan 2021 05:14 PM

ADVERTISEMENT

 

சென்னை: நடிகர் சூர்யாவின் அடுத்த படத்திற்காக பிரபல இசையமைப்பாளர் ஒருவர் அவருடன் முதன்முறையாக கரம் கோர்க்கும் தகவல் வெளியாகியுள்ளது.  

'சூரரைப் போற்று' படத்துக்குப் பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

இது சூர்யா நடிப்பில் உருவாகும் 40-வது படம் என்பதால் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'சூர்யா 40' என தற்போது அழைத்து வருகிறார்கள்.

ADVERTISEMENT

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் அடுத்த படத்திற்காக பிரபல இசையமைப்பாளர் ஒருவர் அவருடன் முதன்முறையாக கரம் கோர்க்கும் தகவல் வெளியாகியுள்ளது.  

பிரபல இசையமைப்பாளர் இமான் இந்தப் படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஞாயிறன்று அறிவித்துள்ளது. இன்று (ஜனவரி 24) இமானின் பிறந்த நாள் என்பதால் அதனை முன்னிட்டு இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இவர்கள் இருவரும் இணைவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT