செய்திகள்

விடியோவில் உள்ளது நான் இல்லை: நடிகை அனிகா விளக்கம்

22nd Jan 2021 02:26 PM

ADVERTISEMENT

 

சமூகவலைத்தளங்களில் பரவியுள்ள விடியோவில் இருப்பது நான் இல்லை என நடிகை அனிகா சுரேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் அனிகா சுரேந்திரன். நானும் ரெளடி தான், மிருதன் படங்களில் நடித்துள்ளார். விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்து அதிகக் கவனம் பெற்றார்.

கவர்ச்சியான உடையணிந்து அனிகா நடனமாடும் விடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த விடியோ குறித்து அனிகா விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

ADVERTISEMENT

கருப்பு உடையில் நான் நடனமாடும் விடியோவைச் சமூகவலைத்தளங்களில் பார்க்கிறேன். அந்த விடியோவில் உள்ளது நான் அல்ல. அது மார்ஃப் செய்யப்பட்டுள்ளது. அந்த விடியோவை நான் பார்க்கும்போது அது நிஜ விடியோ போலத்தான் தெரிந்தது. அந்தளவுக்குத் துல்லியமாக மார்ஃபிங் செய்யப்பட்டுள்ளது.

அந்த விடியோவை இணையத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். நீங்களும் அந்த விடியோ குறித்து புகார் அளித்தால் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார். 

Tags : Anikha Surendran VISWASAM
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT