செய்திகள்

பா. இரஞ்சித் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் யோகி பாபு

22nd Jan 2021 03:51 PM

ADVERTISEMENT

 

பா. இரஞ்சித் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் யோகி பாபு.

பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய இரு படங்களை பா. இரஞ்சித் தயாரித்துள்ளார். ஆர்யா நடிப்பில் சார்பட்டா என்கிற படத்தை இயக்கி வருகிறார். 

இந்நிலையில் பா. இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் பொம்மை நாயகி என்கிற படத்தை பா. இரஞ்சித் தயாரிக்கிறார். ஷான் இயக்குகிறார். இசை - கே.எஸ். சுந்தரமூர்த்தி. 

ADVERTISEMENT

பொம்மை நாயகி படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : Pa Ranjith Yogi Babu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT