செய்திகள்

காலில் அறுவைச் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் கமல் ஹாசன்

22nd Jan 2021 01:16 PM

ADVERTISEMENT

 

காலில் அறுவைச் சிகிச்சை முடிந்து சென்னை தனியார் மருத்துவமனையில் இருந்து நடிகர் கமல் ஹாசன் தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார். 

சென்னை போரூா் ராமச்சந்திரா மருத்துவமனையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல் ஹாசனுக்கு ஜனவரி 19-ல் காலில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து மருத்துவா்களின் தொடா் கண்காணிப்பில் அவா் இருந்து வந்தாா்.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து நடிகர் கமல் ஹாசன் தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார். ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் 10 நாள்கள் அவா் ஓய்வில் இருப்பாா். இதன்பிறகு தோ்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபடவுள்ளார். 

ADVERTISEMENT

தன் காலில் சிறு அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளப் போவதாக கமல்ஹாசன், கடந்த வாரம் கூறினார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சில ஆண்டுகளுக்கு முன்னா் ஏற்பட்ட விபத்து காரணமாக, காலில் ஓா் அறுவைச் சிகிச்சை செய்திருந்தேன். அதன் தொடா்ச்சியாக இன்னொரு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அதுவரை ஓய்வு தேவை என மருத்துவா்கள் அறிவுறுத்தியிருந்தாா்கள். ஆகவே, காலில் சிறு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன். சில நாள்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் என் பணிகளை புதிய விசையுடன் தொடருவேன். இந்த மருத்துவ விடுப்பில் உங்களோடு இணையவழியாகவும், விடியோக்கள் வழியாகவும் பேசுவேன். மாற்றத்துக்கான நம் உரையாடல் இடையூறு இல்லாமல் நிகழும் என்று கூறினார்.

சில நாள்களுக்கு முன்பு, கமலின் மகள்களான ஷ்ருதி, அக்‌ஷரா ஆகிய இருவரும் கமலின் அறுவைச் சிகிச்சை தொடர்பாக அறிக்கை வெளியிட்டார்கள். அதில் கூறப்பட்டதாவது: ராமச்சந்திரா மருத்துவமனையில் மருத்துவர் ஜே.எஸ்.என். மூர்த்தி ஒருங்கிணைப்பில் எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவர் மோகன் குமார் தலைமையில் எங்கள் அப்பாவுக்கு காலில் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமாக உற்சாகமாக இருக்கிறார். நான்கைந்து நாள்களுக்குப் பின் அப்பா வீடு திரும்புவார். சில நாள்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களைச் சந்திப்பார். மகிழ்விப்பார் என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

Tags : Kamal Haasan leg surgery
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT