செய்திகள்

நடிகை ராகினி துவிவேதிக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

21st Jan 2021 02:38 PM

ADVERTISEMENT

 

போதைப் பொருள் தொடர்பான வழக்கில் கன்னட நடிகை ராகினி துவிவேதிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

கா்நாடகத்தில் போதைப்பொருள் கடத்தல், பயன்பாடு அதிகரித்ததையடுத்து அதைக் கட்டுப்படுத்த போலீஸாா் தொடா்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

கன்னட திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதாக திரைப்பட இயக்குநா் இந்திரஜித் லங்கேஷ் தெரிவித்த குற்றச்சாட்டையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பா் மாதத்தில் போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை ராகினி துவிவேதியை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

கைது செய்யப்பட்ட நடிகை ராகினி துவிவேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டாா். அவா், ஜாமீன் கேட்டு கா்நாடக உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவரது தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் விசாரணையை ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில் ராகினி துவிவேதிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Tags : Ragini Dwivedi Sandalwood
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT