செய்திகள்

நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்: பூமி பட இயக்குநர்

DIN

கோமாளி பட வெற்றிக்குப் பிறகு லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் - பூமி. ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை லக்‌ஷ்மன் இயக்கியுள்ளார். பூமி படத்துக்கு இசை - இமான். ஜெயம் ரவியின் ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். பூமி, ஜெயம் ரவியின் 25-வது படம். டிக் டிக் டிக், அடங்க மறு, கோமாளி என ஹாட்ரிக் வெற்றிகளை ஜெயம் ரவி அடைந்துள்ளதால் அடுத்து வரும் அவருடைய படங்கள் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 

பூமி படம் மே 1 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில் கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களின் வரிசையில் பூமியும் இணைந்தது. ஜனவரி 14 அன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பூமி படம் நேரடியாக வெளியானது.

விவசாயிகளின் சிரமங்களைச் சொல்லியுள்ள பூமி படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் அதிகமாக வந்துள்ளன. ட்விட்டரில் ரசிகர் ஒருவர் பூமி படத்தை சுரா, ஆழ்வார், அஞ்சான், ராஜபாட்டை படங்களின் வரிசையில் உள்ளதாகக் கூறினார். நான் பார்த்த மோசமான படம் இது. இயக்குநர் லக்‌ஷ்மனுடன் இணைந்து இனிமேல் ஜெயம் ரவி  பணிபுரியக் கூடாது என்றார். இதையடுத்து மற்றொரு ரசிகர், தற்போது இயக்குநர் லக்‌ஷ்மன் உங்களை பிளாக் செய்வார் என்றார். இதற்கு லக்‌ஷ்மன் பதில் கூறியதாவது:

சார், இந்தப் படம் பண்ணனும், நாம எல்லோருடைய வருங்காலம் நல்லா இருக்கணும்னு நினைச்சேன். உங்களுக்காகத்தான் எடுத்தேன். ரோமியோ ஜூலியட் எடுத்த எனக்கு வணிகப் படம் (எடுக்கத்) தெரியாதா? நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும். நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள், நான் தோற்றுவிட்டேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT