செய்திகள்

இது எங்களுடைய வெற்றி: பிக் பாஸ் பட்டம் வென்ற ஆரிக்கு சனம் ஷெட்டி பாராட்டு

DIN

பிக் பாஸ் பட்டம் வென்ற ஆரிக்குச் சக போட்டியாளரும் நடிகையுமான சனம் ஷெட்டி பாராட்டு தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இம்முறை கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியது. கடந்த மூன்று ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கினார். 

ரம்யா பாண்டியன், ஆஜித், ஆரி, அனிதா சம்பத், வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம், ஷிவானி, சனம் ஷெட்டி, பாலா, கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ரேகா, ரியோ, சம்யுக்தா என 16 பேர் பிக் பாஸ் இல்லத்துக்குள் முதலில் நுழைந்தார்கள். பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா மற்றும் பிரபல பாடகி மற்றும் ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா ஆகியோர் வைல்ட் கார்ட் வழியாகப் புதிய போட்டியாளர்களாக நுழைந்தார்கள். 

ஆரி, பாலா, ரம்யா பாண்டியன், சோம், கேப்ரியலா, ரியோ என ஆறு பேர் கடைசி வாரப் போட்டியாளர்களாக இருந்தார்கள். 

இந்நிலையில் அனைவருடைய எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது. நடிகர் ஆரி பிக் பாஸ் பட்டத்தை வென்றுள்ளார். ஆரிக்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை அளிக்கப்பட்டது. தனது மகளை அருகில் வைத்துக்கொண்டு பரிசுத்தொகையை ஆரி பெற்றார். 

ஆரிக்குப் பாராட்டு தெரிவித்து சக போட்டியாளரும் நடிகையுமான சனம் ஷெட்டி இன்ஸ்டகிராமில் தெரிவித்ததாவது:

இவருடைய வெற்றி நேர்மை, நீதி, விடாமுயற்சிக்கான வெற்றியாகும். அவர்தான் ஆரி அர்ஜூனன். இது எங்கள் அனைவரின் வெற்றி ஆரி. உங்களால் நாங்கள் பெருமை கொள்கிறோம். 

நிஜ வாழ்வில் கதாநாயகனாக உள்ளவரை பிக் பாஸ் 4 வெற்றியாளராகத் தேர்வு செய்ததற்கு விஜய் டிவிக்கு நன்றி என்று கூறியுள்ளார். மேலும் பிக் பாஸ் பட்டம் வென்ற ஆரி மற்றும் அனிதா சம்பத்துடன் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுல் தீவிர அரசியல்வாதி அல்ல: பினராயி விஜயன்

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

SCROLL FOR NEXT