செய்திகள்

விஜய்யின் மாஸ்டர்: தமிழ்நாட்டில் மூன்று நாள் வசூல் ரூ. 50 கோடி!

16th Jan 2021 05:06 PM

ADVERTISEMENT

 

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் படம் தமிழ்நாட்டில் முதல் மூன்று நாள்களில் ரூ. 50 கோடி வசூலித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய். இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியானது. 

ADVERTISEMENT

ரசிகர்களின் வரவேற்பால் நல்ல வசூலை மாஸ்டர் படம் பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் முதல் நாளன்று ரூ. 25 கோடி வசூலை அடைந்தது. இதனைத் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல் மூன்று நாள்களில் ரூ. 50 கோடி வசூலித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Tags : Vijay Master
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT