செய்திகள்

பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிய ரஜினி மகள்! (படங்கள்)

16th Jan 2021 04:32 PM

ADVERTISEMENT

 

தனது கணவர், மகனுடன் பொங்கல் பண்டியைக் கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டகிராம் தளத்தில் வெளியிட்டுள்ளார் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த்.

வஞ்சகர் உலகம் படத்தில் நடித்த நடிகர் விசாகனை ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா 2019-ல் திருமணம் செய்தார்.  கோவை முன்னாள் எம்எல்ஏ பொன்முடியின் சகோதரரும் தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன் விசாகன். வஞ்சகர் உலகம் படத்தில் நடித்துள்ள விசாகனுடன் செளந்தர்யா ரஜினிகாந்துக்கு 2019 பிப்ரவரி மாதம் 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. விசாகன் ஏற்கெனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். அமெரிக்காவில் எம்பிஏ படித்தவர். 2010-ல் தொழிலதிபர் அஷ்வினைத் திருமணம் செய்தார் ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா. இவர்களுக்கு வேத் என்கிற மகன் உண்டு. செளந்தர்யா - அஷ்வின் இடையே கருத்துவேறுபாடு நிலவியதால், இருவரும் 2016-ல் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினார்கள். பிறகு இருவருக்கும் விவகாரத்து வழங்கப்பட்டது. இதையடுத்து விசாகன் - செளந்தர்யா ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. 

கடந்த வருடம் கோவை மாவட்டம் சூலூரில் தனது கணவர், மகனுடன் பொங்கல் விழாவைக் கொண்டாடினார் செளந்தர்யா ரஜினிகாந்த். இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையின்போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டகிராம் தளத்தில் வெளியிட்டுள்ளார் செளந்தர்யா ரஜினிகாந்த்.

ADVERTISEMENT

Tags : Soundarya Rajinikanth Pongal celebration
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT