செய்திகள்

ஓடிடியில் நேரடியாக வெளியாகும் விஜய் சேதுபதி நடித்த படம்

4th Jan 2021 04:20 PM

ADVERTISEMENT

 

விஜய் சேதுபதி நடிக்கும் படங்களின் பட்டியல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இப்போது, விஜய் சேதுபதி நடித்துள்ள முகிழ் படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது. 

லாபம், காத்துவாக்குல ரெண்டு காதல், துக்ளக் தர்பார், இயக்குநர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமாகும் படம், யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய படங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். 19(1)(a) என்கிற மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன், கடைசி விவசாயி, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களின் வெளியீடு தாமதமாகியுள்ளது. ஷாஹித் கபூருடன் இணைந்து ஹிந்தி இணையத் தொடர் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். மணி ரத்னம் தயாரிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள நவரசா இணையத் தொடரிலும் நடித்துள்ளார். ஹிந்தியிலும் அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக், மும்பைகர் என்கிற பெயரில் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிறது. 

இந்நிலையில் முகிழ் என்கிற ஒரு மணி நேரப் படத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. 

ADVERTISEMENT

விஜய் சேதுபதி, ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவாகியுள்ள படம் - முகிழ். விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா, முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தை விஜய் சேதுபதி தயாரித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. முகிழ் படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது.

Tags : VijaySethupathi Mugizh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT