செய்திகள்

தனுஷ் படத்துக்கு வசனம் எழுதும் பிரபல பாடலாசிரியர்

4th Jan 2021 01:17 PM

ADVERTISEMENT

 

தனுஷ் - கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவாகவுள்ள படத்துக்குப் பிரபல பாடலாசிரியர் விவேக் வசனம், திரைக்கதையில் பங்களிக்கவுள்ளார்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்கம் - கார்த்திக் நரேன். தனுஷ் 43 என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகனன் ஒப்பந்தமாகியுள்ளார். இசை - ஜி.வி. பிரகாஷ்.

இப்படத்தின் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதுகிறார் பிரபல பாடலாசிரியர் விவேக். முதல்முறையாக திரைக்கதை, வசனம் எழுதுவதாகத் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார் விவேக். இயக்குநர் அட்லி உள்ளிட்ட பலரும் விவேக்கின் இந்தப் புதிய முயற்சிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT