சென்னை: மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக நடிகர் சிலம்பரசன் உறுதி செய்துள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள திரைப்படம் ‘ஈஸ்வரன்’ இந்தத் திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமையன்று வெளியானது. அந்த நிகழ்வில் பேசிய சிம்பு கூறியதாவது:
ஈஸ்வரனுக்கு பிறகு நான் மாநாடு, பத்து தல உள்ளிட்ட படங்களில் நடிக்க உள்ளேன். அதன்பிறகு மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன். இந்தப் படமானது இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும்.
ADVERTISEMENT
இவற்றைத் தவிர மேலும் மூன்று படங்களில் நான் நடிக்க உள்ளேன். அந்தப் படங்களை இயக்கப்போவது யார் யார் என்பதைப் பற்றி பிறகு முறைப்படி அறிவிப்புகள் வெளியாகும்.
இவ்வாறு சிம்பு பேசினார்.